அங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக்
கிடக்கின்றன புட்டிகள்.
சாக்கடைக்
கால்வாய்களில்...
குப்பைமேடுகளில்...
முட்டுச்சந்துகளில்...
சாலையோரங்களில்...
இருட்டு
மூலைகளில்...
எல்லா
இடங்களிலும்
காணக்
கிடைக்கின்றன புட்டிகள்.
கரும்பச்சை நிறப்
புட்டிகள்...
தங்கநிறம்
மின்னும் புட்டிகள்...
கழுத்து நீண்ட
புட்டிகள்...
சப்பையான
புட்டிகள்...
குடுவை வடிவிலான
புட்டிகள்...
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக்
கிடைக்கின்றன புட்டிகள்.